நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்துத் துறையில் சாதனையாளர்களை உருவாக்கும் பெட்டாலிங் கால்பந்து சங்கத்தின் முயற்சிகள் தொடரும்: பத்துமலை

பெட்டாலிங் ஜெயா:

கால்பந்துத் துறையில் சாதனையாளர்களை உருவாக்கும் பெட்டாலிங் கால்பந்து சங்கத்தின் முயற்சிகள் தொடரும் என்று அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை  கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியை பெட்டாலிங் கால்பந்து சங்கம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

அதே வேளையில் மீபா, ஐஆர்சி உட்பட பல சங்கங்களின் போட்டிகளில் பெட்டாலிங் கால்பந்து சங்க அணி களமிறங்கி சாதித்து வருகிறது.

குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற மீபாவின் தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் இவ்வணி மீபா கால்பந்துப் போட்டியில் சாதித்தது.

இப்படி கால்பந்து விளையாட்டில் பல சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியை பெட்டாலிங் கால்பந்து சங்கம் தொடரும்.

அதே வேளையில் எங்களின் முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு அமிர் ஷா, சிலாங்கூர் கால்பந்து சங்கம், அதன் உதவித் தலைவர் டத்தோ சுகு, செயலாளர் நபில், டச் டுரோனிக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ ரவின் ஆகியோருக்கு எனது நன்றி.

மேலும் எனக்கு துணையாக இருக்கும் பெட்டாலிங் கால்பந்து சங்க துணைத் தலைவர்களான குணா, கென்னத் கண்ணா உட்பட அனைத்து நிர்வாக உறுப்பினருக்கும் என நன்றி என்று பத்துமலை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset