
செய்திகள் மலேசியா
அனைத்துலக முவாதாய் போட்டியில் வெற்றி பெற்ற மலேசியர்களை மஇகா விளையாட்டு பிரிவு கௌரவித்தது
கோலாலம்பூர்:
இந்திய மும்பையில் நடைபெற்ற சர்வதேச கொம்பாட் முவாதாய் விளையாட்டு போட்டியில் மலேசிய இரண்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தது.
சுங்கப்பட்டாணி ஸ்டார் கொம்பாட் முவாதாய் கிளப்பை பிரதிநிதித்து மலேசியக் குழு, நாட்டின் பெயரை சர்வதேச அரங்கில் பிரபலமாக்கி உள்ளது.
7 நாடுகளைச் சேர்ந்த 450 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டித் தொடரில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதையும் பெற்ற மாஸ்டர் குரு பிரகாஷ் குரு நாயுடு தலைமையிலான தேசிய விளையாட்டு வீரர்களுக்கு ம இகா விளையாட்டுப் பிரிவு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அதன் தலைவர் அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
இப்போட்டியில், 70-74 கிலோ எடைப் பிரிவில் கஜேந்திரன் (24 வயது) வெள்ளிப் பதக்கமும், 50 கிலோ எடைப் பிரிவில் அகிலன் சரவணன் (18 வயது) தங்கப் பதக்கமும், 45 கிலோ பிரிவில் சுபாஷினி ( வயது 18) தங்கப் பதக்கமும் வென்றனர்.
விமான நிலையத்தில் கெடாவுக்குத் திரும்புவதற்கு முன், தலைநகரில் அவர்களுடன் அவர்களின் விளையாட்டுத்திறனைக் கண்டு வியப்படைந்து பாராட்டி கௌரவித்தோம் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm