நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன

ஜார்ஜ்டவுன்:

கரப்பான் பூச்சி, எலி மலம் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜார்ஜ்டவுனில் 3 உணவகங்கள் மூடப்பட்டன.

சம்பந்தப்பட்ட உணவகங்கள் அடுத்த 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று பினாங்கு நகராணமைகழகம் ஓர் அறிக்கையில் கூறியது.

சம்பந்தப்பட்ட உணவகங்களில் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தினர்.

சுத்தம், விலைப் பட்டியல், அந்நிய நாட்டு உரிமையாளர்கள் உட்பட பல விவகாரங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டது.

இச்சோதனையில் பல குற்றங்கள் கண்டறியப்பட்டது.

குறிப்பாக சம்பந்தப்பட்ட உணவகங்களில் கரப்பான் பூச்சிகள், எலி மலம் இருந்தது கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் அவ்வுணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset