நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது தளபதி திருவிழா: விஜய்யை காண 75,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்

புக்கிட் ஜலீல்:

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் ஏற்பாட்டில் கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் அரங்கில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். 

டத்தோ மாலிக் எல்லா ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திருந்தார். அவரது ஏற்பாடுகளை பார்த்து நடிகர் விஜய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதனை தனது பேச்சிலும் குறிப்பிட விஜய் மறக்கவில்லை.

மலேசிய சாதனை புத்தகத்தில் தளபதி திருவிழா இடம் பிடித்து மிகப் பெரிய சாதனையை படைத்தது.

பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் இவ்விழாவில் கலந்து கொண்டது உச்சக்கட்ட வரவேற்பை பெற்றது.

விஜய்யை காண 75,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கில் திரண்டனர்.

மலேசியாவில் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இசை வெளியீட்டு நிகழ்வாக இவ்விழா மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தது.

இதற்கான சான்றிதழும் நேற்று தளபதி விஜய், டத்தோ அப்துல் மாலிக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset