நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் நடுத்தர மக்களின் ஊதியம் உயர்ந்துள்ளது: ரஃபிசி ரம்லி

பெட்டாலிங் ஜெயா:

ஜூன் 2023-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் 2024-ஆம் ஆண்டுக்கிடையில் நாட்டின் நடுத்தர மக்களின் ஊதிய 2600 வெள்ளியிலிருந்து 2745 வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது என்று பொருளாதார அமைச்சர்  ரஃபிசி ரம்லி கூறினார்.

ஜூன் 2024 இருந்து 2000 வெள்ளிக்கு குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 34.8 சதவீதத்திலிருந்து 32.2 சதவீதமாக குறையும் என்று அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் சராசரி சம்பளத்தை உயர்த்த அரசாங்கத்திற்கு உந்துதலாக விளங்குகிறது.

இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் சம்பளமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

ஒரு மாதத்திற்கு 2,000 ரிங்கிட்டுக்கும்  குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டாலும், குறைந்த ஊதியம் பெறுவது தேசிய பொருளாதாரத்திற்கு இன்னும் சவாலாக உள்ளது.

அந்த வகையில் 2.167 மில்லியன் மலேசியர்களுக்கு சமமான 32.2 சதவீகித தொழிலாளர்களுக்கு இன்னும் மாதம் 2,000 ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset