நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2030 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி குறித்து ரொனால்டோ மகிழ்ச்சி

ரியாத்:

2030ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை போர்த்துகல்  நடத்த அனுமதி கிடைத்தது குறித்து ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டுக்கான போட்டியை போர்த்துகல் உட்பட 5 நாடுகள் நடத்த அனுமதி கிடைத்ததுள்ளது.

2034ஆம் ஆண்டுக்கான  உலகக் கிண்ண போட்டிகள் சவூதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகள் 6 நாடுகளிலும் நடைபெறுமென ஃபிஃபா அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.

இது குறித்து ரொனால்டோ போர்த்துகல் ஜெர்ஸி அணிந்த புகைப்படத்தை பகிர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

கனவு நனவானது. 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டியை போர்த்துகல் நடத்த அனுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான உலகக் கிண்ண போட்டியாக இது இருக்கும் என்றார்.

5 உலகக் கிண்ண தொடரில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

2030 உலகக் கிண்ண போட்டியிலும் அவர் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset