நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று குகேஷ் சாதனை

சிங்கப்பூர்: 

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். 

இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார். 14 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 

2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.

இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் டிங் லிரேன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் 6-6 என்ற சமநிலையை எட்டினர். 

13-வது சுற்று புதன்கிழமை (டிச.11) நடைபெற்றது. அதில் இருவரும் 6.5 - 6.5 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிரா ஆனது.

இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 14-வது சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குகேஷ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இருவரும் ஈடு கொடுத்து விளையாடி வந்தனர். 

நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட போட்டியில் குகேஷ் தனது 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset