நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

T20 உலகக் கிண்ணப்போட்டி: இலங்கை அணி மலேசியா பயணம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான T 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்று (11) இலங்கையிலிருந்து புறப்பட்டது.

16 அணிகள் பங்குபற்றும் இப் போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடவுள்ளது.

இலங்கையின் முதல் போட்டி மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன உட்பட 15 பேர் கொண்ட அணியை நேற்று (10) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்தது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset