செய்திகள் விளையாட்டு
உலகக் கோப்பையை வென்ற முதல் மலேசியப் பெண்மணி நடாஷா ரோஸ்லானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வாழ்த்து
ஹாங்காங்:
ஹாங்காங் கவுலூனில் நடைபெற்ற 2025 சர்வதேச பந்துவீச்சு போட்டியில் (IBF) உலகக் கோப்பையை வென்ற முதல் மலேசியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதற்காக, தேசிய மகளிர் பந்துவீச்சாளர் நடாஷா ரோஸ்லானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.
“உங்களது வெற்றி அருமையானது. இது உண்மையிலேயே அசாதாரணமானது. உலகக் கோப்பையை வென்ற முதல் தேசிய மகளிர் பந்துவீச்சாளர் என்ற பெருமையை நடாஷா ரோஸ்லான் பெற்றுள்ளார். உங்கள் சாதனைக்காக நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்..
ஆண்கள் தனிநபர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதற்காக முஹம்மது ரஃபிக் இஸ்மாயிலையும் அன்வர் வாழ்த்தினார். மேலும் அவர்களின் இந்த இரண்டு வெற்றிகளும் உலகளவில் விளையாட்டுகளில் மலேசியாவிற்கு பெருமை சேர்க்க மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று தாம் பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
28 வயதான நடாஷா, இறுதிப் போட்டியில் ஜெர்மன் பிர்கிட் நோரிக்ஸை 217-166, 226-169 என்ற கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியனானார். மலேசியாவின் 53 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையில், 2018 உலக சாம்பியனான முஹம்மது ரஃபிக் இஸ்மாயில், ஆண்கள் தனிநபர் இறுதிப் போட்டியில் சீனாவின் டு ஜியான் சாவோவிடம் தோல்வியடைந்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 9:00 am
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
January 13, 2025, 9:52 am
எப்ஏ கிண்ணம்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 13, 2025, 9:46 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
January 12, 2025, 5:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது
January 12, 2025, 9:05 am
லா லீகா கால்பந்து போட்டி: வெலன்சியா சமநிலை
January 12, 2025, 8:22 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
January 11, 2025, 10:25 pm
T20 உலகக் கிண்ணப்போட்டி: இலங்கை அணி மலேசியா பயணம்
January 11, 2025, 9:31 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் தோல்வி
January 11, 2025, 9:19 am