செய்திகள் தொழில்நுட்பம்
ChatGPT சேவை உலகளாவிய நிலையில் திடீர் முடக்கம்: பயனர்கள் புகார்
கோலாலம்பூர்:
ChatGPT சேவை உலகளாவிய நிலையில் திடீரென முடங்கியதால் பயனர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து இன்று காலை நிலவரப்படி OpenAI சேவைக்கு 14,075 அறிக்கைகள் கிடைத்துள்ளதாக Downdetector.com என்ற அவுட்டேஜ் கண்காணிப்பு இணையதளம் தெரிவித்துள்ளது.
சிக்கலைக் கண்டறிந்து அதைக் கையாள்வதாக OpenAI தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
தற்போது இடையூறுகளை எதிர்கொள்கிறோம். பிரச்சனையை அடையாளம் கண்டு அதைத் தீர்க்கபணியாற்றி வருகிறோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ChatGPT தவிர, பாதிக்கப்பட்ட பிற சேவைகளான API மற்றும் Sora ஆகியவை உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பயனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சேவை முடக்கம் இலவச பயனர்களை மட்டுமல்ல, பிரீமியம் சேவை சந்தாதாரர்களையும் உள்ளடக்கியது.
சமூக ஊடக தளங்களில் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும், சிக்கலைத் தீர்ப்பதற்கும் சேவை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும் மதிப்பிடப்பட்ட நேரத்தை OpenAI குறிப்பிடவில்லை.
அதன் சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள், மெதுவான உள்நுழைவுகள் மற்றும் பல அம்சங்களில் செயல்திறன் குறைதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைப் புகாரளித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
