நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2034-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறும் 

ரியாத்:

2034-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல்-ஃபைசல் தெரிவித்தார்.

2034-ஆம் ஆண்டுப் போட்டியை நடத்த சவுதி அரேபியாவைத் தவிர்த்து வேறு எந்த நாடும் ஆர்வம் தெரிவிக்கவில்லை.

இஃது ஒரு பெருமைக்குரிய தினம் என்றும் உலகையே சவுதி அரேபியாவிற்கு அழைப்பதாகவும் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி அல்-ஃபைசல் கூறினார்.

ஆனால் மனித உரிமை அமைப்புகள் அந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தன.

போட்டியின் ஏற்பாட்டைச் சவுதி அரேபியாவிடம் கொடுப்பதால் கட்டுமான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அவை கூறின.

இந்தப் போட்டியை 2030-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை மொரோக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset