நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சுங்கைப்பட்டாணி தாமான் யூனிவர்சிட்டி பெஸ்தாரியில் அனைத்து ரக வீடுகளும் விரைவாக விற்கப்படுவது எஹ்சான் மேம்பாட்டு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை நிரூபிக்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்

சுங்கைப்பட்டாணி:

சுங்கைப்பட்டாணி தாமான் யூனிவர்சிட்டி பெஸ்தாரியில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் கட்டம் கட்டமாக விற்று முடிந்துள்ளன.

இது எஹ்சான் மேம்பாட்டு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை நிரூபிக்கிறது என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ பிவி அப்துல் ஹமித் கூறினார்.

தாமான் யூனிவர்சிட்டி பெஸ்தாரின் 3, 4ஆம் கட்ட திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் முழுமை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கியவர்களுக்கு தங்களின் சாவிகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கோவிட்19 தொற்றுநோய்க்குப் பிந்தைய விளைவுகள் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டமும் அட்டவணைப்படி முடிக்கப்படுவதை உறுதி செய்வதில் ஏசான் கட்டுமானக் குழுமம் முழு அர்ப்பணிப்பை  வழங்கி வருகிறது.

நாங்கள் எப்பொழுதும் 100% முயற்சி, உறுதிமொழி அளித்தபடி எங்கள் வீட்டுத் திட்டங்களை முடிப்பதில் உறுதியாக உள்ளோம்.

இதன் அடிப்படையில் தான் பல சாவல்கள் வந்தாலும் அட்டவணையில் சொன்னபடி குறித்த தேதியில் வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டது.

இது ஏசான் நிறுவனத்தின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.

தாமான் யூனிவர்சிட்டி பெஸ்டாரி திட்டம் என்பது ஒரு மாடி வீடுகள், செமி-டி வீடுகள் கொண்ட  திட்டமாகும்.

முழு திட்டமும் எட்டுக் கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, கட்டம் 1 முதல் கட்டம் 4 வரை விற்றுத் தீர்ந்துவிட்டது.

இது எஹ்சான் நிறுவனம் வழங்கும் தரம், மதிப்பில் வாங்குபவர்களின் நம்பிக்கையை நிரூபிக்கிறது.

மேலும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உட்பட பல வசதிகள் இங்கு வீடுகள் வாங்குபவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும் ஒற்றை மாடி வீடுகளைக் கொண்ட 5 ஆம் கட்டத்திற்கான கட்டுமானம் சிறப்பாக நடந்து வருகிறது.

அதே வேளையில் செமி-டி வீடுகளை கொண்ட 7ஆம் கட்டம் விரைவில் விற்பனைக்கு திறக்கப்படும்.

மேலும் வாங்குபவர்களுக்கு இந்த பகுதியில் தங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை எங்கள் நிறுவனம் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset