நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிரியாவில் உள்ள இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

 புது டெல்லி:

சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

ஹாம்ஸ் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிரியாவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு மறுஅறிவிப்பு வரும் வரை அங்கு பயணிப்பதை இந்திய குடிமக்கள் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே அங்கு வசித்து வருவோர் விமானங்கள் மூலம் உடனடியாக இந்தியா திரும்பவும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்தை +963 993385973 என்ற அவசரகால உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset