நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

3-ஆவது முறை ’ஆஸ்கார்’ விருது பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்

சென்னை:

2 ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 3ஆவது முறையாக விருது வெல்லும் வாய்ப்பினை நெருங்கி இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, உலகம் போற்றும் முக்கிய இசை கலைஞராக திகழும் அவர், தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருதை வென்றவர். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

அண்மையில் மலையாளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்த ஆடுஜீவிதம் படத்திற்கும் அவர் இசையமைத்திருந்தார். 

ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனதுர் பிளஸி இயக்கத்தில் வெளியான படம் ஆடு ஜீவிதம்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற, 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் மற்றும்  சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆடுஜீவிதம் படத்தின் பாடலும் இடம் பெற்றுள்ளது. 

சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆடுஜீவிதம் படத்தில் இருந்து, இன்டிக்ஃபேர், புதுமழ ஆகிய இரு பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset