நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: 38 பேர் பலி

காபூல்:

ஆப்கானிஸ்தானில் ஷியா  பிரிவினருக்கான பள்ளிவாசலில்  வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர்.

காந்தஹார் நகரிலுள்ள இமாம் பர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இந்தத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஷியா பிரிவினருக்கான அந்த மசூதியில், உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்த சிலர் அதனை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.

முதலில் இரண்டு பேர் பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்; பின்னர் அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மேலும் இரு சிலர் மசூதிக்குள் நுழைந்து, தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களிடையே புகுந்து தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.  

குண்டுஸ் மாகாணத் தலைநகர் குண்டுஸிலுள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 46 பேர் பலியாகினர். அந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்)  அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset