செய்திகள் வணிகம்
50ஆம் ஆண்டு பொன்விழாவில் ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார்: வாடிக்கையாளர்களின் ஆதரவே எங்களின் வெற்றிக்கு அடித்தளம்: புர்ஹான் முஹம்மத்
பெட்டாலிங் ஜெயா:
ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் உணவகத்தின் தொடர் வெற்றிக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவே முக்கிய காரணமாகும்.
அவ்வுணவகத்தின் உரிமையாளர் புர்ஹான் முஹம்மத் இதனை கூறினார்.
ஒரிஜினல் பினாங்கு காயூ நாசி கண்டார் உணவகத்திற்கு இந்த ஆண்டு 50 வயதை எட்டுகிறார்.
அவ்வகையில் நாளை டிசம்பர் 7ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SS2 உணவகத்தில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
குறிப்பாக அன்றைய தினம் இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை இலவச நாசி கண்டார் உணவும் வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
அரச குடும்பத்தினர் சிறப்பு விருந்தினராக வரும் அளவிற்கு உணவகத் தொழில் உயர்ந்துள்ள புர்ஹானுக்கான பயணம் 1974 இல் SS2 இல் அவர் தனது தந்தையால் தொடங்கப்பட்டது.
அதற்கு முன் என் தந்தை 1960ஆம் ஆண்டுகளில் தள்ளுவண்டியில் மீ கோரெங் விற்று வந்தார்.
அதே வேளையில் 1970களில் பெட்டாலிங் ஜெயாவின் பாரமவுண்ட் கார்டனில் உள்ள தற்போதைய நியூ சீவியூ காஃபி ஷாப்பில் எனது சித்தப்பா ஒரு ஸ்டால் வைத்திருந்தார். அங்கு அவருக்கு உதவியாக இருந்தேன்.
அதன் பின் முழு நேரமும் ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டாரின் வெற்றிக்காக பாடுபட்டேன்.
இன்று ஒரே இடத்தில் 50 ஆண்டுகள் வியாபாரம் செய்ததுடன் பொன்விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம்.
மேலும் நாடு முழுவதும் 10 ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார் உணவகங்களும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டாரின் தரம், சுவையான உணவே முக்கிய காரணம்.
அதே வேளையில் வாடிக்கையாளர்களின் ஆதரவும் இதற்கு முக்கிய காரணமாகும்.
அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் நாளைய நிகழ்வு நடைபெறுகிறது.
ஆகவே வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டாரின் பொன்விழாவில் கலந்து கொள்ளுமாறு புர்ஹான் முஹம்மத் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
உணவு தயாரிக்கும் தொழில்துறையில் பீடுநடை போடும் பிரான்சிஸ் மார்ட்டின்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
