செய்திகள் மலேசியா
'மித்ரா'வுக்கான நிதிகள் மாயமானது குறித்து விசாரணை: ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உருமாற்ற பிரிவு எனப்படும் 'மித்ரா'வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தின்போது 'மித்ரா'வுக்கான நிதிகள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும் மாயமானதாகவும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஊழல் தடுப்பு ஆணையம் தனது முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'மித்ரா' விவகாரம் குறித்து ஒரு புகாரைப் பெற்றுள்ளதாகவும், அரசு சார்பற்ற அமைப்பான 'NGO Pemuda Gen Z' அப் புகாரை அளித்துள்ளதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகள், நிதியைப் பெற்றவர்கள் அதை செலவிட்ட விதம், தனி நபரோ அல்லது நிறுவனங்களோ செய்திருக்கக் கூடிய ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து பல்வேறு கோணங்களில் முழுமையான விசாரணை நடைபெறும் என ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
'மித்ரா'வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து நடப்பு ஒற்றுமை அமைச்சு புகார் அளிக்கலாம் என அந்த அமைச்சின் முன்னாள் அமைச்சரான வேதமூர்த்தி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 5:05 pm
கெஅடிலான் கட்சியில் இரு முகாம்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை: டத்தோஸ்ரீ ரமணன் அதிரடி
April 5, 2026, 4:21 pm
சாலையோரம் கவிழ்ந்து பற்றி எரிந்த லாரி: 55 வயது ஓட்டுநர் பலி
April 5, 2026, 3:30 pm
சுவையும் சேவையும் தரமாக இருந்தால் உணவகத் தொழிலில் தோல்வி காண முடியாது: டத்தோஸ்ரீ சரவணன்
April 5, 2026, 3:24 pm
குடிவரவுச் சட்ட விதிமீறல்: விசா இன்றி தங்கியிருந்த 4 வெளிநாட்டினருக்குக் கடும் அபராதம்
April 5, 2026, 3:02 pm
பள்ளி வேன் ஏறி மரணமடைந்த 7 வயது சிறுவன் உதயகுமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
April 5, 2026, 2:58 pm
