
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் கரையோரங்களிலுள்ள சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பொய்கை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளப் பெருக்கால் குடியிருப்புகள், உடைமைகளை இழந்த தங்களுக்கு, மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டஅத்தியாவசியத் தேவைகள் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் வரவில்லை. நிவாரண உதவிகள் செய்யவில்லை எனக்கூறி, சுமார் 500-க்கும் மேற்பட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் காலை 8 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கிச் சென்றபோது, இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த சிலர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.
கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது தெறித்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் விழுப்புரம் தீபக் ஸ்வாட்ச், திருவாரூர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm