
செய்திகள் மலேசியா
வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் MRSM ஐ பயன்படுத்தலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தகவல்
கோத்தா பாரு:
வெள்ளப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதிகாரிகள் MRSMஐ பயன்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்
இதுவரை கிளாந்தான் மாநிலத்தில் 550 வெள்ள நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
MRSMஇல் புதிய வெள்ள நிவாரண மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் நிர்வாகியான அவர் கருத்துரைத்தார்
மதியம் 3 மணி வரை கிளாந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20ஆயிரத்திலிருந்து 64ஆயிரத்தைத் தாண்டியது. அவர்கள் அனைவரும் முறையே 237 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 4:59 pm
பிரதமர் நாளை தொடங்கி மூன்று நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ தொடர் பயணங்களைத் தொடங்குகிறார்
June 30, 2025, 4:56 pm