நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களின் விடுமுறைகளும் ரத்து: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமர் உத்தரவு 

புத்ராஜெயா:

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் முடக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் பேரிடர் பகுதிக்கு உடனடியாக செல்லவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் 7 மாநிலங்களில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 78,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் களத்தில் பணியை தொடர வேண்டும்.

இதனால் விடுமுறைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset