நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகடிவதை சம்பவங்களில் ஈடுப்பட்ட 5 கேடட் அதிகாரிகளின் உயர்க்கல்வி படிப்பு நிறுத்தப்பட்டது: காலிட் நோர்டின்

கோலாலம்பூர்:

தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் நிகழ்ந்த மூன்று பகடிவதை சம்பவங்களில்  ஈடுப்பட்ட 5 கேடட் அதிகாரிகள் இனி உயர்க்கல்வி தொடர் இயலாது என்று தற்காப்புதுறை அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு அரச மலேசிய ஆகாயப் படை மன்றம் ஒப்புதல் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட கேடட் அதிகாரிகள் தங்கள் படிப்பின் போது ஏற்படும் செலவுகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கேடட் அதிகாரிகளின் நியமனங்களை ரத்து செய்தல், மலேசிய ஆயுதப்படை சேவையிலிருந்து நீக்குதல் மற்றும் மலேசிய அரசாங்கத்திடம் இழப்பீடு வசூலிப்பது உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு எதிராக அரச மலேசிய ஆகாயப் படை மன்றத்திற்கு நடவடிக்கை எடுக்க இராணுவ பயிற்சி முகாம் பரிந்துரைத்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset