நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல் 

கோலாலம்பூர்: 

மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. 2016,2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மூன்றாவது முறையாக தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு நடைபெறுகிறது 

இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோலாலம்பூரிலுள்ள ASIA PACIFIC பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது 

தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாட்டில் சுமார் 500 பேர் வரை கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் , பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதாக மாநாட்டின் தலைவர் முனைவர் செல்வஜோதி கூறினார் 

இந்த மாநாட்டின் வாயிலாக தமிழ்க்கல்வியில் ஏற்படும் முக்கிய சவால்களும் வாய்ப்புகளும் கண்டறியப்படவுள்ளது. மேலும், இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும், தமிழ்மொழி, இலக்கியம் பாடங்களை எடுப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் விரிவாக பேசப்படவுள்ளதாக அவர் சொன்னார் 

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் கல்விக்கழக மாணவர்களுக்கு டிக்கெட் விற்பனையில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து குறைந்த கட்டணமாக 50 ரிங்கிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

இந்த மாநாட்டின் முதன்மையான ஏற்பாட்டாளர்களாக மலேசியத் தமிழ் அறவாரியம், இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம், மலேசியத் தமிழ்க் காப்பகம், இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர் சங்கம், மலேசிய தமிழ்ப் பயிற்றியல் சங்கம் ஆகியோர் இருக்கின்றனர். 

ஆக, தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முனைவர் செல்வஜோதி கேட்டுகொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset