நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் கொரியாவிடமிருந்து  FA-50M இலகுரக போர் விமானங்கள் வாங்கும் நடவடிக்கை விரிவுப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார்

சியோல்: 

மலேசியா தென் கொரிய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து 18 FA-50M இலகுரக போர் விமானங்கள் வாங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.  

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் உடனான இருதரப்பு சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

ஒப்பந்தத்தின் அடிப்படையில் 18 FA-50M இலகுரக போர் விமானங்கள் அடுத்தாண்டு மலேசியா வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இருப்பினும், இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக, மலேசியாவின் 18 FA-50M இலகுரக போர் விமானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 39 சதவீதத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset