நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்

வாஷிங்டன்: 

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று அடுத்தாண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20-ஆம் தேதி என்னுடைய முதல் நிர்வாக உத்தரவில் மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 20 சதவீதம் வரிவிதிப்பு.

அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset