நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டு தலங்களுக்கான நிதியை கட்டுப்படுத்தும் திட்டம் பகுத்தறிவற்றது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு தலங்களுக்கான நிதியை கட்டுப்படுத்தும் திட்டம் பகுத்தறிவற்றது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

அரசாங்கத்தின் நிதியுதவியை பெற விரும்பும் ஆலய நிர்வாகங்கள் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் இயங்கும் இ-ரிபியின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்நிலையில் இந்நிதியை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு கட்டுப்பாடுகளை மும்மொழிந்துள்ளது.

அதாவது நிதியை பெரும் வழிபாட்டு தலங்கள் அடுத்த 3 வருடத்திற்கு அந்நிதிக்கு விண்ணப்பம் செய்ய முடியாது.

நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலையால் இந்த முன்மொழிவும் பொருத்தமற்றது. குறிப்பாக இது பகுத்தறிவற்றது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்கள் எதிர்கொள்ளும் நிதி அழுத்தம் ஆகியவை இந்த மூன்று ஆண்டு தடை முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இடங்களுக்கு உதவாது.

மேலும் இது மேலாண்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு, திருவிழாக்கள், ஏற்பாடுகள் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளை சார்ந்துள்ளது. 

இந்நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் வழிபாட்டுக்கு மட்டுமல்லாது சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் சமூக நிலையங்களாகவும் செயற்படுகின்றன.

ஆகவே அரசாங்கம் இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset