நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: பாஸ்

கோலாலம்பூர்:

நாட்டில் எந்தவொரு சூழ்நிலையிலும் மலாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ தகியூடின் ஹசான் கூறினார்.

வணிக வளாகங்களின் விளம்பரப் பலகைகளில் மலாய் மொழியைப் பயன்படுத்துவதில் கவனக் குறைவான அணுகுமுறையை ஏற்க முடியாது.

காரணம் இது மலேசியாவின் அடையாளத்திற்கு எதிரானது.

பஹாசா மெலாயு மக்களிடையே தொடர்பு கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

அதை கவனக்குறைவாகப் பயன்படுத்துவது தேசிய ஒற்றுமை, அடையாளத்தின் முயற்சிகள், அபிலாஷைகளுக்கு செய்யும் துரோகமாக கருதப்படலாம்.

மலேசியா மக்களின் தேசபக்திப் பொறுப்பாக, எந்தச் சூழ்நிலையிலும் பஹாசா மெலாயு இறையாண்மையும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset