நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது 

பெட்டாலிங் ஜெயா:

நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பெட்டாலிங் ஜெயா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நேற்று சரஸ்வதி ஹோமம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 

நாட்டில் தலைசிறந்த சமய சொற்பொழிவாளர்களின் தன்முனைப்பு உரையுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சரஸ்வதி ஹோமம் தொடங்கியது. 

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு நன்மை அடைந்தனர்.

ஆலயத்தின் தலைவர் டான்ஸ்ரீ அரிய நாராயணன், ஆலய அறங்காவலர்கள் சபை ஏற்பட்டில் இந்திய மாணவர்களுக்காக இந்த சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலய அறங்காவலருமான தங்கப்பெருமாள் தெரிவித்தார். 

தர்மலிங்கம்,  சிவமணி ஆகியோரின் சமய தன்முனைப்பு பேச்சு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக பணிவு ஓய்வு பெறும் பெட்டாலிங் சரஸ்வதி தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதாவின் அளப்பரிய சேவைகளை பாராட்டும் வகையில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு சமூக நிகழ்ச்சிகளும், கல்வி கருத்தரங்குகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என ஆலய செயலாளர்,  அறங்காவலருமான சதீஸ் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset