நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நார்வே: வில், அம்பு மூலம் தொடர் தாக்குதல்; 5 பேர் உயிரிழந்தனர்: பிரதமர் எர்னா சோல்பெர்க்

ஒஸ்லோ:

நார்வேயின் காங்ஸ்பெர்க் நகரில் நேற்று வில் மற்றும் அம்பு ஆயுதம் ஏந்திய ஒருவர் நடத்திய தொடர் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டது என்பதையும், ஒரே நபர்தான் இந்த தொடர் தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் காங்ஸ்பெர்க் போலீஸ் தலைவர் ஒய்விந்த் ஆஸ் உறுதிப்படுத்தினர். 

Man armed with bow and arrow kills five people in Norway attacks, police  say | Reuters

இத் தாக்குதலில் மற்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும், இது பயங்கரவாத தாக்குதலா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், "இன்றிரவு காங்ஸ்பெர்க்கிலிருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுகிறது, மக்களில் பலர் பயப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset