நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொலை செய்த கணவன்: இரட்டை ஆயுள் தண்டனை

கொல்லம்:

பாம்பை கடிக்க வைத்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த எஸ். சூரஜ் குமார் (28)  அவருடைய மனைவி உத்ரா (25) தூங்கிக் கொண்டிருந்தபோது அறைக்குள் பாம்பை விட்டு கடிக்கை வைத்து கொலை செய்ததாக  குற்றம்சாட்டப்பட்டது.

அவரை கைது செய்த போலீஸார் கொலை, கொலை முயற்சி, விஷம் கொடுத்தல், ஆதாரங்கள் அழிக்க முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் சூரஜ் குமார் குற்றவாளி என தீர்ப்பளித்து கேரள கூடுதல் நீதிபதி எம்.மனோஜ், சூரஜ் குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 5.85 லட்சம் அபராதம் விதித்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

விஷம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆதாரங்களை அழிக்க முயற்சித்த குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விஷம் கொடுத்தல் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தம் 17 ஆண்டுகள் தண்டனையை சூரஜ் குமார் முதலில் அனுபவிக்க வேண்டும், அதன் பிறகே அவருக்கான ஆயுள் தண்டனை தொடங்கும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார் என்று கூறினார்.

"நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திருப்தியில்லை. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்' என்று உத்ராவின் தாய் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset