நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ஷார்ஜா:

ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றின் இராண்டாவது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. 

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினார்கள்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. சுழலில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் நெருக்கடி கொடுத்தனர். இவர்களுக்கு இணையாக பெர்குஷன் மற்றும் ஷிவம் மவி வேகத்தில் திணறடித்ததால் கொல்கத்தா அணியின் ரன்ரேட் ஆமைவேகத்தில் நகர்ந்தது.

ஷிகார் தவான் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ப்ரித்திவ் ஷா (18), மார்கஸ் ஸ்டோனிஸ் (18) ரன்களில் அவுட்டாகினர். கேப்டன் ரிஷப் பந்த் வந்த வேகத்தில் 6 ரன்கள் மட்டும் அடித்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணிக்கு மிகச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.  குறைவான ரன் எடுத்தால்போதும் என்பதால் நிதானமாக ரன்களைச் சேர்ந்தனர். 12 ஓவரில் கொல்கத்தா அணி 92 ரன்கள் எடுத்திருந்தநிலையில் முதல் விக்கெட்டை எடுத்தார் ரபாடா. 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருநிலையில் வெங்கடேஷ் ஐயர் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 46 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது, 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 125 ரன்கள் எடுத்திருந்தது. 20 பந்துகளில் 11 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் இருந்த கொல்கத்தா அணியின் ஆட்டம் தலைகீழாக மாறி டெல்லி அணியின் கைக்கு சென்றது. 126-வது ரன்னில் தினேஷ் கார்த்திக் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Kolkata Knight Riders Survive Stunning Delhi Capitals Fight Back To Enter  IPL 2021 Final - Highlights

அவரைத் தொடர்ந்து கேப்டன் ஓயன் மார்க்கனும் ரன் ஏதும் எடுக்காமல் நோர்டிஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தை ராகுல் திரிபதி எதிர்கொண்டர். அவர் முதல் பந்தில் ஒரு ரன்னை எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ரைக்குக் வந்த ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுனில் நரேனும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் ஸ்டிரைக்கு வந்த ராகுல் திரிபாதி சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

நாளை வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி இறுதி போட்டியில் விளையாடும். இது துபாய் மைதானத்தில் நடைபெறும்.  

தொடர்புடைய செய்திகள்

+ - reset