செய்திகள் தொழில்நுட்பம்
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
கடந்த 2022ல் நடந்த பிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி இறுதிப் போட்டியில் வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி.
உலகின் தலை சிறந்த கால் பந்து விளையாட்டு வீரராக கருதப்படும் இவர், பிரான்ஸ் பத்திரிகையான பிரான்ஸ் புட்பால், 1956 முதல் வழங்கி வரும் கவுரவமிக்க பாலன்டீஆர் விருதை 8 முறை வென்று சாதனை படைத்தவர்.
அரங்கில் களமிறங்கினால் மெஸ்சியின் கால்கள் மந்திரக் கோலாய் மாறி பெரும்பாலான நேரம் பந்தை கட்டுக்குள் வைத்திருப்பதை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்ப்பர்.
மெஸ்சியின் அபாரமான ஆட்டத்தை பார்த்து வியந்து போன, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அவரை விட சிறப்பாக செயல்படும் ரோபோவை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாம் உருவாக்கி வரும் ரோபோவுக்கு கால்பந்தில் மெஸ்சியை மிஞ்சும் ரோபோ அல்லது ஆர்டெமிஸ் என பெயரிட்டுள்ளனர்.
மெஸ்சியுடன் தொடர்புபடுத்தி இந்த ரோபோ உருவாகி வருவதால், இந்த ரோபோ கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
பரிசோதனைக் கூடத்தில் ஆர்டெமிசை விஞ்ஞானிகள் சோதித்தபோது, நொடிக்கு 2.1 மீட்டர் (6.9 அடி) வேகத்தில் நடப்பதை பார்த்து வியந்தனர்.
இதுவரை உருவான ரோபோக்களில் அதிவிரைவாக நடக்கக் கூடிய ரோபோ இதுவாகத்தான் இருக்கும் என அவர்கள் கூறினர்.
கால்பந்தாட்ட அரங்கில் இந்த ரோபோ அசுர வேகத்தில் ஓடும் வல்லமை உடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், வரும் 2050ல், உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்டெமிசை பங்கேற்கச் செய்யும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm