செய்திகள் தொழில்நுட்பம்
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
புவனேஸ்வர்:
நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் முதல் சோதனை ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை ஆய்வகங்கள் வளாகத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் டிஆா்டிஓவின் ஆய்வகங்கள், பிற இந்திய தொழிற்சாலைகளால் இணைந்து இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
1,500 கி.மீ. தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை பொருந்தியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை மூலம், நெடுந்தொலைவு சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ‘ஹைப்பர்சோனிக் திட்டம்’ இந்திய வரலாற்றில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் ரஷியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஏவுகணை சோதனை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm