நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் போது இறைச்சி உணவு: மன்னிப்பு கோரிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்

லண்டன்:

தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியில் இறைச்சி உணவு, மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற்றது.

பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் பலர் பங்கேற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் மதுபானம், இறைச்சி உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது.

தீபாவளி தொடர்பான நிகழ்ச்சியில் இறைச்சி உணவு, மதுபானம் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset