செய்திகள் உலகம்
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
பேங்காக் :
தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 22-ஆம் தேதி முதல் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டதாகப் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை கூறியதுச்
இந்த வெள்ளத்தால் சுமார் 664,173 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மேலும், திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 22,000 பேர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஏழு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறை ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்ய குறையத் தொடங்கியுள்ள போதிலும், தென் சீனக் கடலிலிந்து சியாம் வளைகுடா வழியாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் இரண்டாவது அலை அப்பகுதியில் தாக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை அமைப்பு டிசம்பர் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 4:48 pm
தென்கொரிய அதிபரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை எதிர்கட்சி கொண்டு வந்தது
December 4, 2024, 3:45 pm
இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்
December 4, 2024, 11:23 am
வாங்கி வந்த உணவு பிடிக்கவில்லை: தந்தையைக் கொன்ற மகன்
December 4, 2024, 10:53 am
தென் கொரியாவில் ராணுவ ஆட்சிப் பிரகடனத்தை மீட்டுக்கொள்வதாக அதிபர் அறிவிப்பு
December 3, 2024, 8:31 pm
இலங்கையில் வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு
December 2, 2024, 3:59 pm
டாலருக்கு எதிராக செயல்பட்டால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை
December 1, 2024, 9:42 pm
கருணைக் கொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
November 30, 2024, 9:41 am