செய்திகள் தொழில்நுட்பம்
மியாட் சர்வதேச மருத்துவமனையில் முதன்முறையாக ரோபோடிக் சர்ஜரி அறிமுகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை:
சென்னை மணப்பாக்கத்தில் மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுக விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை முறையினை தொடங்கி வைத்தார். அவருக்கு ரோபோட்டிக் சிகிச்சை செயல்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் விளக்கி கூறினார்.
அறுவை சிகிச்சையின் போது,உடலில் ரத்தபோக்கு விரையம், தசைகள் சேதம் மற்றும் நேர விரையம் போன்றவற்றை குறைக்கும் வகையில் “மியாட் இன்ஸ்ட்டியூட் ரோபோடிக் சர்ஜரி சிஸ்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு பின் இந்த சிகிச்சை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மியாட் ரோபோடிக் மருத்துவ அறுவை சிகிச்சை மருத்துவர்களான செந்தில்குமார், மணிகண்டன், பெருங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் உடலில் மார்பு, வயிற்று பகுதியில் உள்ள அனைத்து பெரிய புற்றுநோய்கள், உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரகம், நுரையீரல், கருப்பை நீக்கம், தலை, கழுத்து அறுவை சிகிச்சைகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள் என உச்சி முதல் கால்கள் வரையிலான 140 வகையான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வாயிலாக மருத்துவ செலவும், கட்டணமும் சாதாரண அறுவை சிகிச்சையை விட மிகவும் குறைவாக உள்ளது.
மணிக்கணக்கில் அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் சோர்வடைவார்கள். ஆனால் ரோபோடிக் சிகிச்சையில் நேர விரையம் குறைகிறது. மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் போதும், நுண்துளை அறுவை சிகிச்சை முறையிலான “எண்டோஸ்கோப்பிக்” சிகிச்சை முறையிலும் நோயாளிகளின் திசுக்கள் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்படும். ரத்தபோக்கும் அதிகமாக இருக்கும்.
ஆனால், இந்த சிகிச்சையின்போது விஷன் எனப்படும் பார்வை தெளிவாக, துல்லியமாக தெரிவதால், தசைகள் சேதம் ஏற்படாமலும் ரத்தப்போக்கு இல்லாமலும், மிக துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது.
அறுவை சிகிச்சையின்போது “ரோபோடிக்ஸ் அசிஸ்டட் இன்ட்ரா ஆபரேட்டிவ் அல்ட்ராசவுண்ட் சிஸ்டம்” என்ற கருவி வாயிலாக, உடற்கூறியியல் விவரங்களுடன் தெளிவான படங்களை அனைத்து கோணங்களிலும் முழு ரோபோ அசைவுடன் படம் பிடிக்கப்படுகின்றன.
இது, உடலில் உள்ள கட்டிகள் மலக்குடல் அமைந்துள்ள இடுப்பு போன்ற கடினமான பகுதிகளில் கருவி எளிதாக நுழைய முடிகிறது.
அறுவை சிகிச்சையில் ஏற்படும் பெரிய, நீண்ட கால வடு, வலி இதில் இல்லை. திசுக்களில் ஏற்படும் பக்கவாட்டு பாதிப்பையும் இது தடுக்கிறது.
மியாட் மருத்துவமனையில் இதுவரை 3 ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் இந்தமுறை சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 10, 2024, 10:43 am
நவீன மனிதக் குளியல் இயந்திரத்தை ஜப்பானின் சயின்ஸ் கோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am