நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கி சேமிப்பு வட்டியைவிட இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு: மூத்த குடிமக்கள் பாதிப்பு

புது டெல்லி:

வங்கி நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை விட இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சேமிப்பில் பணம் வைத்துள்ள மூத்த குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதம் என்ற அளவில்  இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் அறிவித்தது. இந்த நிலையில், வங்கிகள் மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் அதைவிட குறைவாகவே உள்ளது.

For senior citizens, these are the best ways to invest their money |  Business News,The Indian Express

2-3 ஆண்டுகளுக்கான டொபசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு 5.1 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. இதுவும், நடப்பு நிதியாண்டின் பணவீக்க எதிர்பார்ப்பான 5.3 சதவீதத்தை காட்டிலும் குறைவான அளவே ஆகும்.

இதனை கருத்தில் கொள்ளும்போது, பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்கள் வங்கிகளிலிருந்து பெறும் வட்டியானது குறைவானதாகவே உள்ளது. இதனால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset