நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.  சரவணன் இதனை கூறினார்.

அருணகிரிநாதர் ஒரு தலைசிறந்த ஆன்மிகத் தலைவர். 

பக்தி இலக்கியத்தின் முன்னோடி. தலைவர்கள் எல்லாம் அமைச்சர் ஆகலாம். ஆனால் அமைச்சர்களெல்லாம் தலைவர் ஆக முடியாது.

அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன. 

அவர் நமக்காக திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி போன்ற பாடல்களை அருளியுள்ளார்.

வாழ்க்கையில் நம்மை முன்னேற்றுவது வசிய மைகள் அல்ல, மாறாக, நம் முயற்சி, அறிவு, மற்றும் நேர்மையான செயல்கள்.

தமிழுக்கு இசையின் இனிமை, இசைக்கு பக்தியின் ஆழம், பக்திக்கு முக்தியின் வழி அனைத்தையும் ஒரே பாதையில் இணைத்தவர் அருணகிரிநாதர்.

அருணகிரிநாதரின் ஒவ்வொரு பாடல்களும் இறைவனைப் போற்றும் இசைச் சுரபியாகவும், தமிழின் கவிதைச் செழுமையை வெளிப்படுத்தும் முத்தாகவும் திகழ்கின்றன. ஆன்மாவை உயர்த்தும் இசைமிகு பக்திப் பயணமாகும். 

இவரது சொல்லாற்றலுக்குச் சான்றாகவே, "வாக்குக்கு அருணகிரி" என்ற பழமொழி இன்று வரை ஒலிக்கிறது.

அவரது பாடல்கள், பக்தி, இசை, தமிழ் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தெய்வீகக் கவிதையின் நதியாக ஓடுகின்றன என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset