நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசாரால் ஆடவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம்; விசாரணை அறிக்கைகள் சிலாங்கூர் வழக்கு விசாரணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

போலிசாரால் ஆடவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சிலாங்கூர் வழக்கு விசாரணை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

உள்ளூர்வாசி ஒருவர், ஒரு போலிஸ் அதிகாரி என்று நம்பப்படும் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறிய வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சிலாங்கூர் மாநில பொது வழக்கறிஞர் இலாகாவின் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த மாதம் பந்திங்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள், மேலும் ஆலோசனை  அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக  சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset