நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும்  வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலிசார் கைது செய்தனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

மது அருந்தியபடி ஒருவர் தலையில் ஹிஜாப் அணிந்திருப்பதைக் காட்டும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், உள்ளூர்வாசிகள் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக.சுபாங் ஜெயாவில் இன்று மாலை 22 வயது இளைஞரும் 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

முதல்கட்ட போலிஸ் விசாரணையில் தலையில் ஹிஜாப் அணிந்து மது அருந்திய நபர் ஒரு ஆண் என்பது கண்டறியப்பட்டது.

மேலும்  குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298ஏ,  தகவல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset