நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ நண்பர்கள் உட்பட அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டம் அன்பின் மதிப்பை ஊக்குவிக்கட்டும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தட்டும், அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.

பண்டிகை விடுமுறைகளை நல்ல முறையில் அனுபவிக்க வேண்டும்.

இந்த பண்டிகை காலம் முழுவதும் அனைவருக்கும் எப்போதும் பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் வழங்கப்படட்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset