நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை

கங்கார்:

பெர்லிஸ் மாநில சட்டமன்றம்  மாநிலத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  நடத்த தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கும்.

தேசிய கூட்டணிகளுக்குள் ஏற்பட்ட உள் அரசியல் கொந்தளிப்பு காரணமாக எதிர்பாராத விதமாக காலியிடத்தை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.
இது மாநில அரசாங்கத்தின் பெரும்பான்மையைப் பாதித்துள்ளது.

சாத் செமான் (சுப்பிங்), ஃபக்ரூல் அன்வர் இஸ்மாயில் (பிண்டிங்), முகமட் ரிட்சுவான் ஹாஷிம் (குவார் சாஞ்சி) ஆகிய மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று முதல் பாஸ் கட்சியில் தங்கள் உறுப்பினர் பதவியை உடனடியாக துறந்தனர்.

இதை  அடுத்து காலியிடங்களான சுப்பிங், பிந்தோங், குவார் சாஞ்சி ஆகிய தொகுதிகள் காலியாகி உள்ளன.

இதனால் அங்கு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என பெர்லிஸ் மாநில சட்டமன்ற சபாநாயகர் ரஸ்ஸெல் ஐசான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset