செய்திகள் இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்.
17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த 2 நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் நைஜீரியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார்.
இதனையடுத்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 12, 2024, 10:26 am
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm
முடித்திருத்தகங்களில் பெண்களுக்கு ஆண்கள் சேவை செய்யக் கூடாது: உ.பி. அரசுக்கு பரிந்தரை
November 9, 2024, 4:28 pm
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
November 9, 2024, 11:45 am
அதிர்ஷ்ட காருக்கு 4 லட்ச ரூபாய் செலவில் இறுதி ஊர்வலம்:விவசாயியின் வினோத பாசம்
November 8, 2024, 7:00 am
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
November 8, 2024, 6:54 am