நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லை திறப்பு குறித்து பரிசீலிக்க சிங்கப்பூர் அரசுக்கு ஜோகூர் மந்திரி பெசார் கோரிக்கை

ஜோகூர்:

மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள SOPக்களின் அடிப்படையில், இரு நாடுகளின் எல்லைகளைத் திறப்பது குறித்து சிங்கப்பூர் அரசு பரிசீலிக்க வேண்டும் என ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முஹம்மத்  கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியாவில் தற்போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கையானது, சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்களை மனதளவில் பாதித்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

"ஏன் தங்களால் மட்டும் நாடு திரும்ப முடியவில்லை? ஏன் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இயலவில்லை? எனும் கேள்விகள் அவர்கள் மனதில் எழுந்திருக்கும். இந்தச் சூழ்நிலை அவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தி இருக்கும்," என்றார் முதல்வர் ஹஸ்மி முஹம்மத்.

சிங்கப்பூரில் தற்போது தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டி உள்ளது, எனினும் இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையைத் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை சிங்கப்பூர் அரசு நிறுத்திவிடக் கூடாது என்றார்.

"சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மலேசிய சுகாதார அமைச்சு கலந்தாலோசித்துள்ளது. எல்லைத் திறப்பு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முன்னர் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் விரும்புகிறது. அதற்காக மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது.

"என்னைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் எத்தகைய நிலை காணப்பட்டாலும், தற்போது நம்மிடம் முழுமையான தடுப்பூசி உள்ளது என்பதுதான் முக்கியம். எனவே தொற்று எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள் என்பது கவலைக்குரிய விஷயமல்ல.

"முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் நாம் கொரோனா கிருமியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். எனவே தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எல்லைத் திறப்பும் சாத்தியம்தான்," என்று மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முஹம்மத் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset