நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளுக்குப் பூப்பந்து பயிற்சி பட்டறை: பூச்சோங்கில் சிறப்பாக நடைபெற்றது 

பூச்சோங்: 

பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளுக்குப் பூப்பந்து பயிற்சி பட்டறை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை பூச்சோங்கில் உள்ள ப்ரோ ஓன் பூப்பந்து மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது 

பெட்டாலிங் உத்தாமா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டிலும் SHUTTLE WARRIORS பூப்பந்து அணியின் ஒத்துழைப்பிலும் இந்த பூப்பந்து பயிற்சி பட்டறை நடைபெற்றது 

May be an image of 5 people, people playing tennis and text

இந்த பூப்பந்து பயிற்சி பட்டறையில் பெட்டாலிங் உத்தாமாவைச் சுற்றியுள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 175 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், பூப்பந்து பயிற்சி பட்டறை முதன்முறையாக நடத்தப்படுகிறது என்று பெட்டாலிங் உத்தாமா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் திருமதி கி. புஸ்பராணி கூறினார். 

SHUTTLE WARRIORS பூப்பந்து அணியுடன் இணைந்து இந்த பூப்பந்து பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்பட்டது. இந்த அணி அனைத்தையும் இலவசமாக சேவைகளை வழங்கினார்கள். அதாவது மாணவர்களின் போக்குவரத்துக்கு பண உதவி செய்தனர். 
கலந்து கொண்ட மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.

May be an image of 13 people, people playing volleyball, people playing football, people playing tennis and text

இந்த பட்டறையின் வாயிலாக மாணவர்கள் பூப்பந்து விளையாட்டில்  ஆர்வம் கொள்ள வேண்டும்.
MSSD, MSSS இதுபோன்ற விளையாட்டுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தங்களின் ஈடுபாட்டினைச் செலுத்த வேண்டும் என்று புஷ்பராணி குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவரும் தேசிய அளவியலான மலேசிய தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவருமான திரு எஸ்.எஸ். பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset