நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவின் காபந்து - பராமரிப்பு முதல்வராக சுலைமான்: ஏற்க இயலாது  என்கிறது பக்காத்தான்

கோலாலம்பூர்:

மலாக்காவில் காபந்து - பராமரிப்பு முதல்வராக டத்தோஸ்ரீ சுலைமான் மொஹம்மத் அலி நீடிப்பதை ஏற்க இயலாது பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.

மாநில சட்டமனறத்தில் சுலைமான் தனக்குரிய பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டார் என பக்காத்தான் உச்சமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

அம் மாநிலத்தில் அண்மைக்காலமாக அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இந் நிலையில், பெரும்பான்மையை இழந்துவிட்ட காரணத்தால் காபந்து அரசாங்கத்துக்கு தலைமையேற்கும் தகுதியை சுலைமான் இழந்துவிட்டார் என்பது பக்காத்தானின் வாதமாக உள்ளது.

"மலாக்கா சட்டமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை சுலைமான் இழந்துவிட்டார். இது தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் காபந்து அரசை வழிநடத்தும் தகுதி அவருக்கு இல்லை எனச் சொல்கிறோம். எனவே அவர் காபந்து முதல்வராக முன்னிறுத்தப்படுவதை ஏற்க இயலாது," என பக்காத்தான் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்க்கவும் அம்மன்றம் முடிவு செய்துள்ளது.

Anwar sifatkan Guan Eng, Mat Sabu sahabat sejati — MYKMU.NET

காபந்து முதல்வர் குறித்து முடிவெடுக்கும் முன்னனர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் Adly Zahari, சுங்கை ஊடாங் உறுப்பினர் டத்தோஸ்ரீ இத்ரீஸ் ஹாரூன் மற்றும் சுலைமான் தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் பக்காத்தான் உச்ச மன்றம் மேலும் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக மலாக்காவின் காபந்து முதல்வராக சுலைமான் நீடிப்பதாக பெர்னாமா செய்தி முகமை தெரிவித்திருந்தது. நேற்று பக்காத்தான் உச்ச மன்றம் வெளியிட்ட அறிக்கையில், அதன் உறுப்புக் கட்சிகளான பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் மொஹமத் சாபு, ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், United Progressive Kinabalu Organisation தலைவர் டத்தோஸ்ரீ வில்ஃபிரெட் மடியஸ் டங்காவ் (Datuk Seri Wilfred Madius Tangau) ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset