நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விசுவாசமாக இருப்பேன்: ஐபிஎல் தோல்விக்குப் பிறகு கோலி உருக்கமான பேச்சு

ஷார்ஜா:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலியின் கனவு கலைந்தது.

ஷார்ஜாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 139 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு விராட் கோலி கூறியதாவது:-

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் நான் ஒரு வீரராக கடைசி வரை விளையாடுவேன். அந்த அணிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னை பொருத்தவரை விசுவாசம் முக்கியமானது.

பெங்களூர் அணியில் விளையாடும் இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் விளையாடும் கலாச்சாரத்தை நான் உருவாக்க முயற்சித்துள்ளேன். இதேபோன்ற கலாச்சாரத்தைத்தான் நான் இந்திய அணியிலும் உருவாக்கி இருக்கிறேன்.

என்னால் முடிந்த அளவு சிறப்பாக அணிக்காக செய்திருக்கிறேன். இதற்கான எதிர்வினை பதில் எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் ஆர்.சி.பி அணிக்காக 120 சதவீத உழைப்பை ஒவ்வொரு முறையும் வழங்கி இருக்கிறேன்.

Kohli frustrated by RCB's lack of 'game awarness' after loss - Hindustan  Times

அடுத்து ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மறுசீரமைப்பதும், மறுகட்டமைப்பை உருவாக்குவதும் முக்கியமானது.

நான் வேறு ஏதாவது அணியில் விளையாடுவேன் என்று கருதவில்லை. கடைசியாக ஆடும் வரை ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுவேன்.

கடைசி ஓவர் வரை போராடியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுதான் எங்களது அணியின் அடையாளம். கிறிஸ்டியன் ஓவரில் 22 ரன்கள் கொடுத்தது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இரு ஓவர்களில் அதிகமான ரன்களை கொடுத்ததும் வெற்றி வாய்ப்பை பாதித்தது.

ஐபில் தோல்விக்குப் பிறகு விராட் கோலியின் பேச்சு உருக்கமாக அமைந்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset