நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்

புது டெல்லி:

ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி 2016-இல் இதே நாளில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

ஊழல், கருப்புப் பணத்தை தடுக்க ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதாக அவர் கூறினார். ஆனால், பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றுதான் இந்தியாவில் ரொக்கப் பரிவர்த்தனை அதிகமாக உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாராத் துறைகளை அழித்ததன் மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது.

பொதுமக்களிடம் இருந்த பணம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உடன் ஒப்பிடுகையில், 2013-14ம் ஆண்டில் 11 சதவீதத்தில் இருந்து 2016-17-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8 சதவீதமாக குறைந்திருந்தது.

இதையடுத்து, 2020-21இல் அது 14 சதவீதமாக உயர்ந்து, இறுதியாக 2022-23-ஆம் ஆண்டில் அது 12 சதவீதத்தில் உள்ளது என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset