நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முடித்திருத்தகங்களில் பெண்களுக்கு ஆண்கள் சேவை செய்யக் கூடாது: உ.பி. அரசுக்கு பரிந்தரை

லக்னோ:

தையல் கடை, முடிதிருத்தகம், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு சேவை செய்ய ஆண்களுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தவறான தொடுதலில் இருந்து பெண்களை பாதுகாக்க இதை செய்ய வேண்டும் என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி மையங்களில் கண்டிப்பாக பெண் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். அங்கு கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்த மாநில எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset