செய்திகள் இந்தியா
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்தான்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1967இல் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த அமர்வில், 4:3 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அமர்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் சிறுபான்மை அந்தஸ்துக்கு எதிரான தீர்ப்பை அளித்துள்ளதாலும், பொரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைப்போல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமா என்பது தீர்மானிக்க உச்சநீதிமன்ற நிர்வாகம் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு, புதிய முறையான அமர்வில் விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஓய்வு பெறும் நாளில் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து சர்ச்சை தொடர்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2024, 4:21 pm
மும்பையில் ஆப்கான் துணைத் தூதர் நியமனம்
November 13, 2024, 12:31 pm
பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக 16-ஆம் தேதி நைஜீரியா செல்கின்றார்
November 12, 2024, 10:26 am
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் விஸ்தாரா
November 9, 2024, 9:48 pm
ரூ. 500, ரூ.1000 திரும்பப் பெற்று 8-ம் ஆண்டு; ஏகபோகத்துக்கு வழிவகுத்தது: ராகுல்
November 9, 2024, 4:37 pm
முடித்திருத்தகங்களில் பெண்களுக்கு ஆண்கள் சேவை செய்யக் கூடாது: உ.பி. அரசுக்கு பரிந்தரை
November 9, 2024, 11:45 am
அதிர்ஷ்ட காருக்கு 4 லட்ச ரூபாய் செலவில் இறுதி ஊர்வலம்:விவசாயியின் வினோத பாசம்
November 8, 2024, 7:00 am
இரவோடு இரவாக வீட்டை இடித்த உ.பி. அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம்
November 8, 2024, 6:54 am