நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஊராட்சி மன்ற தலைவர்

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.

இதில் கடல்மணி, கன்னியம்மாள் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் கன்னியம்மாள் 423 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கடல்மணி 424 வாக்குகளும் பெற்றனர். இதனால் கடல்மணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset